பாக்முட்டில் இருந்து ரஷ்ய படைப்பிரிவு பின்வாங்கியதாக உக்ரைன் அறிவிப்பு..!
பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி, பாக்முட்டின் சில பகுதிகளில் உக்ரைனின் எதிர்த் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படை வீரர்கள் சிலர் புறமுதுகு காட்டி ஓடுவது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.
ரஷ்யா முறையாக வெடிமருந்துகளை வழங்கத் தவறியதால் தங்களது வீரர்கள் பாக்முட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் கூறி வரும் நிலையில், அவரது கூற்றை மேற்கோள் காட்டி உக்ரைன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Comments