2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.
டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில், நிதியமைச்சரை, ஜப்பான் மற்றும் மார்ஷல் தீவுகளுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வரவேற்றார். நிகாட்டாவில் நாளை நடைபெறவுள்ள G7 நிதி அமைச்சர்கள் கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
வணிகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான வட்டமேசை சந்திப்பையும் இந்த பயணத்தில் நிர்மலா சீதாராமன் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Comments