குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்திய டிராஃபிக் ஃபைன் போட்டோ!

0 1710

கேரளாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற நபரை புகைப்படம் எடுத்த போக்குவரத்து சிக்னல் கேமரா அதை அவரது மனைவிக்கு அனுப்பியதால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு,போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இடுக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஹெல் மெட் அணியாமல் சாலையில் தன்னுடைய தோழி ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணம் செய்திருக்கிறார். விதிமுறைகளை மீறி இருவரும் பயணம் செய்தது தொடர்பான புகைப்படம் மற்றும் அபராதம் செலுத்தவேண்டிய விவரங்களை அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்தின் உரிமையாளராக இருந்த மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு அந்த பெண் யாரென்றே தெரியாது எனவும், லிஃப்ட் கேட்டதால் உதவி செய்ததாகவும் கூறியுள்ளர்.

இதை நம்ப மறுத்த மனைவியையும் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளிக்கவே, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்நபரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments