பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை வரவேற்பு
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இருநாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜூன் 22ம் தேதி அதிபர் ஜோ பைடனும் அவர் மனைவியும் வெள்ளைமாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க உள்ளனர் என்று அதிபரின் ஊடகச் செயலாளர், கரீன் ஜீன் பியரி அறிவித்துள்ளார்.
இந்தோ பசிபிக் சுதந்திரமான வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையும் என்றும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
Comments