அக்காவுக்கு ஆபரேசனா...? விடுப்பு எடுத்தால் தொலைத்து விடுவேன்...! மின்வாரிய பொறியாளர் ஆவேசம்

0 3095

சத்தியமங்கலம் அருகே சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு விடுப்பு கேட்ட மின் ஊழியருக்கு, விடுப்புதர மறுத்து இளநிலை மின் வாரிய பொறியாளர் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை மின் பொறியாளராக உள்ளவர் தீபக்.

இவரிடம் அதே மின் நிலையத்தில் மின் ஊழியராக பணிபுரியும் ஹரிராஜன் என்பவர் தான்
மூன்று நாள் ஷிப்ட் பார்த்திருப்பதாகவும், அக்காவுக்கு ஆபரேஷன் இருப்பதால் மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு தீபக், லீவு எல்லாம் தர முடியாது, நான் சொல்லும்போது தான் நீ லீவு எடுக்க வேண்டும், அதிகாரிகளை அனுசரித்து போனால் ஒட்டிக்கலாம் என மிரட்டியதோடு, நான் அமைதியாக இருப்பேன் என நினைத்துக் கொள்ளாதே.. ஒழுக்கமாக சொல்கிற வேலையை செய்ய வேண்டும், இல்லையேல் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்வாரிய இளநிலை பொறியாளர் தீபக் , மின் ஊழியர் ஹரி ராஜனிடம் பேசிய தொலைபேசி உரையாடல் குறித்து மின்வாரியதுறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், ஹரிராஜன் அடிக்கடி விடுப்பு எடுத்து கொள்வதால் அப்படி பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments