காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 3 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

0 1387

காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 3 பேரின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சோபியான், குப்வாரா மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 3 பேரின் அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments