மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: பிரிஜ் பூஷணுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் - ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சாக்சி மாலிக் வலியுறுத்தல்
ஏழு மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகாருக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனையான சாக் ஷி மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி, மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றார்.
பிரிஜ் பூஷண் சிங் தலைவராக உள்ள ஒரு அமைப்பு நடத்தும் அத்தனை விளையாட்டுப் போட்டிகளையும் நிராகரிப்போம் என்று கூறிய சாக்சி மாலிக், அவர் தவறு செய்யாதவர் என்றால் உண்மை கண்டறியும் கருவி முன்பாக சோதனைக்குத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
Comments