கர்நாடகாவில் யார் ஆட்சி? - தேர்தலுக்குப் பிந்தய கணிப்புகள்

0 2180

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு என்று தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துகணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அவற்றில் கூறப்பட்டுள்ளது. 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி யார் தயவும் இன்றி தனியாக ஆட்சி அமைக்க முடியும்.

நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 114 இடங்களையும் காங்கிரஸ் 86 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  சுவர்ணா நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 94 முதல் 117 இடங்களைப் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 94 முதல் 108 இடங்களும் பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்களும் கிடைக்கு எனக் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் 113 இடங்களை காங்கிரஸ் பிடிக்கும் என்றும் 85 இடங்களை பாஜக பிடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற கருத்துகளிலும் தொங்கு சட்டப்பேரவை அமையவே வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments