ட்ரோன்கள் மூலம் ரத்தம் கொண்டுசெல்லும் வசதி.. முதன்முறையாக டெல்லியில் பரிசோதனை..
இரத்தம் மற்றும் மருந்துப் பொருட்களை 'ஐ-டிரோன்' மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நாட்களில் போக்குவரத்து வசதி குறைவான மலைப்பாங்கான பகுதிகளுக்கு தடுப்பூசிகள் டிரோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிரோன் மூலமாக கொண்டுச் செல்லப்பட்டால் மருந்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுகிறதா எனவும் வெப்பநிலை பராமரிப்பு குறித்தும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் மருத்துவ பயன்பாட்டில் டிரோன்கள் ஈடுபடுத்தப்படுமென கவுன்சில் இயக்குநர் ஜெனரல் ராஜீவ்பால் தெரிவித்துள்ளார்.
Comments