விஷம் கலந்த உணவை உண்டதால் பாதிக்கப்பட்ட கழுகுகள்.. சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்!
அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் விஷம் கலந்த உணவை உண்டதால் மயக்கம் அடைந்த கழுகுகள், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.
சிவசாகர் பகுதியில் உள்ள கர்குச் நவோஜான் வயல் வெளியில் கடந்த ஜனவரி மாதம், 24 கழுகுகள் உயிரிழந்து கிடந்தன. 8 கழுகுகள் மயக்க நிலையில் இருந்தன.
மயக்க நிலையிலிருந்த கழுகுகளை மீட்டு அவற்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், முழுமையாக குணமடைந்த அந்த கழுகுகள் இன்று மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.
Comments