காங்கோ நாட்டில் வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.... ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்

0 3007

காங்கோ நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தெற்கு கிவு மாகாணத்தில் பெய்த திடீர் கனமழையால் நதிக்கரையோரம் உள்ள நியாமுகுபி, புஷூஷூ ஆகிய 2 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அக்கிராமங்களில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், 5,500 பேர் பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள், நிதியுதவியும், நிவாரண பொருட்களையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments