ஸ்பெயினில் வறட்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி!
ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 1961ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது.
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லிய்டா நகரில் திரண்டு டிராக்டர்களை மெதுவாக இயக்கி பேரணியாக சென்றனர்.
வேளாண் உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கூடுதல் விலை, மானியம் வழங்கி உதவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Comments