உக்ரைனுக்கு புதிதாக 1.2 பில்லியன் டாலர் ராணுவ நிதி உதவியை அறிவித்துள்ளது அமெரிக்கா..!
உக்ரைனுக்கு புதிதாக 1.2 பில்லியன் டாலர் ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் மற்றும் பயிற்சிக்கான நிதி ஆகியவை இந்த நிதியில் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.
இவை தவிர மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் வெடி மருந்துகள், 155 மில்லி மீட்டர் ஹோவிட்சர் வெடி மருந்துகள் மற்றும் செயற்கைக் கோள் படங்கள் பெறுவதற்கும் இந்த நிதி பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்னகவே 2022ம் நிதியாண்டில் 6.3 பில்லியன் டாலர்களும், 2023ம் நிதியாண்டில் 5 பில்லியன் டாலர்களும் நிதி உதவியாக அமெரிக்கா வழங்கி உள்ளது.
Comments