செங்கல்பட்டில் பெண் நீதிபதி வீட்டில் கொள்ளை.. 207 சவரன் நகைகள் மற்றும் ரூ.30,000 பணம் பறிமுதல்!

0 3211

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதி வீட்டில் 207 சவரன் நகை கொள்ளையடித்த செவிலியர் மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

அசோக் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளரான மதுரகவியின் மருமகள் போக்சோ நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 6 ஆம் தேதியன்று தனது வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, 185 சவரன் நகைகள் மற்றும் 50,000 பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை முன்னெடுத்த போலீசார், மதுரகவியின் மனைவிக்கு வீட்டிலே மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக சில நாட்களுக்கு முன் பணியமர்த்தப்பட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த செவிலியரான தேவி, நகைகள் மற்றும் பணத்தை திருடி அவரது நண்பரான ஜெகநாதனிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்த போலீசார், புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த நகைகளை விட கூடுதலாக கொள்ளையடித்த நகைகளையும், 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments