கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

0 1262

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடகாவில், சுயேச்சைகள் உட்பட மொத்த ம் 2,615 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதியன்று நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments