மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்-இன் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு..!

0 2066

மைக்ரோசாப்ட்டின் சமூக வலைதளமான லிங்க்ட்-இன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி லிங்க்ட் இன்னுக்கு சொந்தமான  சீன உள்ளூர் வேலைவாய்ப்பு செயலியான Incareer முழுவதுமாக மூடப்பட உள்ளதாகவும், அதன் விற்பனை பிரிவில் பணியாற்றும் 716 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சிஇஓ  ரியான் அனுப்பிய இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிதாக 250 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், அவற்றுக்கு பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு பணி அடுக்குகளை நீக்குவதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி மேம்படும் என லிங்க்ட் இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments