தமிழக அமைச்சரவை மாற்றமா? - நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்
நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்?, துணை முதலமைச்சராக்கப்பட்டால் கூட நல்லதுதான் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதிலளித்தார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை இருக்கிறதா? என முதலமைச்சர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், எந்த அமைச்சரும் பொறுப்பு மாற்றப்படுமா? என்ற பதற்றத்தில் இல்லை என்றும் கூறினார்.
அமைச்சரவை மாற்றம் குறித்த பரிந்துரைக்காக ஆளுநர் மாளிகைக்கு சென்றால் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் செல்வேன் என்றும் தெரிவித்தார்.
Comments