கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டு தூதர் வெளியேற சீனா உத்தரவு

0 2385

கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள கனடா தூதரை வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை ஆதரித்ததற்காக கனடாவின் எம்.பி. மைக்கேல் சோங்  மற்றும் அவரது உறவினர்களை ஹாங்காங்கில் சீன உளவு அமைப்புகள் கைது செய்ய திட்டமிட்டன.

இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக சீன தூதர் ஜாவோ வெய், வெளியேற வேண்டும் என கனடா எச்சரித்தது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மே 13-ந் தேதி சீனாவில் இருந்து வெளியேறும்படி, கனடா தூதர் ஜெனிபர் லின் லாலண்டுக்கு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments