பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

0 2538
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வாசலில் கைது செய்யப்பட்டார்.
 
ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, பாகிஸ்தான் ரூபாயில் 530 மில்லியன் மதிப்பிலான இடத்தை இம்ரான்கானுக்கு சொந்தமான அல்காதிர் அறக்கட்டளைக்கு வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் ஆஜராகிவிட்டு வந்த இம்ரான் கானை சுற்றி வளைத்து கைது செய்து துணை ராணுவப்படையினர் கவச வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
 
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த இஸ்லாமாபாத் போலீசார், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும், அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 
 
இம்ரான்கான் ஏற்கனவே ராணுவத்தின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments