மனிதர்களின் 80 சதவீதம் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் - அமெரிக்க -பிரேசிலிய ஆராய்ச்சியாளர்

0 1566

வரும் ஆண்டுகளில் மனிதர்களின் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க -பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை மனித உருவ ரோபோக்களில் செலுத்தினால், சமூகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும், முதியவர்களின் தனிமையை போக்கி, அவர்களுக்கு ஆதரவாக அவை செயல்படும் என்றும் தெரிவித்தார்.

நர்சிங் மற்றும் நர்சிங் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான நபர்கள் இல்லாத சூழலில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மனித உருவ ரோபோக்கள் அவற்றுக்கு மாற்றாக இருக்கும் என்றும் பென் கோர்ட்செல் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments