இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற நம்பிக்கை.. தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்த பீட்டர் தீல்

0 2171

இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில், பிரபல பே பால் நிறுவனத்தின் தலைவரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பீட்டர் தீல் தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்து வைத்துள்ளார்.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவிலுள்ள அல்கார் என்ற அமைப்பு இறந்து போன மனித உடல்களையும் விலங்குகளின் உடல்களையும் கிரையோனிக்ஸ் என்ற முறையில் உறைநிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் பிரபல மின்னணு வணிக நிறுவனமான பே பால் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பீட்டர் தீல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, தாமும் அந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments