வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2557

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10ஆம் தேதியன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments