60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல்!

0 6855

60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல் அளித்துள்ளன.

சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நிதி நெருக்கடியில் தவிக்கும் தலிபான் அரசாங்கம் இந்த திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் உள்கட்டமைப்பு முதலீட்டைப் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அந்நாட்டின் வளங்களின் மீது சீனா ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் வடக்கு அமு தர்யா படுகையில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துணை நிறுவனத்துடன் தலிபான்கள் தங்களது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments