சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ரூ.2,000 கோடிக்கு மதுபான ஊழல் - அமலாக்கத்துறை

0 1246

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுபான ஊழல் நடந்துள்ளதாகவும், உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில், மது விற்பனைக்கு லஞ்சம், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதற்கு கமிஷன் என நடந்த மிகப் பெரும் மோசடி தொடர்பான வழக்கில், மதுபான தொழிலதிபர் அன்வர் தேபார், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் மொத்த மதுபான விற்பனையில் 30 முதல் 40 விழுக்காடு வரை சட்டவிரோதமாக நடத்தப்பட்டது என்றும், இதன் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் அமலாக்கத்ததுறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments