6 நிமிடங்கள் கொரோனா நடவடிக்கையில் தளர்வு... கண்ணீர் மல்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சந்தித்து கொண்ட உறவினர்கள்

0 1595
6 நிமிடங்கள் கொரோனா நடவடிக்கையில் தளர்வு... கண்ணீர் மல்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சந்தித்து கொண்ட உறவினர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருநாடுகளை சேர்ந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத்தழுவி நலம் விசாரித்தனர்.

கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. டிரம்ப் அரசால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பைடன் அரசில் வரும் 11 ஆம் தேதிக்கு பிறகு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 11 ஆம் தேதிக்கு பிறகும் எல்லை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் இருபுறமும் வசிக்கும் உறவினர்கள் 6 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசி கொள்ள அனுமதிக்கப்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். 150க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments