அதிசக்திவாய்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வானிலேயே அழித்த உக்ரைன்
ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கின்சல் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து தகர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் பெற்ற இந்த ரஷ்ய ஏவுகணை, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments