புதிதாக திறக்கப்பட்ட பேக்கரிக்குள் புகுந்து திண்பண்டங்களை தள்ளிவிட்டு கடை ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்..!

0 4371

பழனியில், புதிதாக திறக்கப்பட்ட பேக்கரிக்குள் புகுந்து பணம் கேட்டு தகராறு செய்ததாக போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த அம்சா என்பவர் நடத்தி வரும் பேக்கரி 3 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர், பேக்கரிக்கு வந்து டீ,காபி குடித்துவிட்டு திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஓடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்றிரவும் அதே 3 பேர் மதுபோதையில் கடைக்கு வந்து கல்லா பெட்டியிலுள்ள பணத்தை எடுக்க முயன்றுள்ளனர்.

அதில் ஒருவன் போதையில் உணவு பொருட்கள் மீது சாய்ந்ததால், கடைக்காரர் அவரை தள்ளிவிடவே, ஆத்திரத்தில் அவரை தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கடை ஊழியர்கள் 3 பேர் காயமடைந்த நிலையில், பேக்கரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments