அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தில் அலென் நகரிலுள்ள வணிக வளாகத்தினுள் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மாலுக்கு வெளியே சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததோடு குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் தெரியவரவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments