கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 2-ம் நாளாக திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி..!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் 2வது நாளாக பிரதமர் மோடி இன்று திறந்த வாகனத்தில் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து இன்று சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று ஆதரவு திரட்டினார்.
அவருக்கு சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments