பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணத்தை வைத்து இருப்பதாக ரஷ்யா தகவல்!

0 47118

பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணத்தை வைத்துக் கொண்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இது முக்கியமான பிரச்சினையாகும் என்று கூறினார்.

இந்திய பணத்தைப் பயன்படுத்த அது வேறு கரன்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், இது குறித்து இந்தியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டில் ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 11 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து விட்டது. அதே நேரத்தில் இறக்குமதி 5 மடங்கு அதிகரித்து 41 புள்ளி 56 பில்லியன் டாலராக உள்ளது.

ரஷ்யாவிடமிருந்து குறைக்கப்பட்ட விலையில் இந்தியா கச்சா எண்ணெய் அதிகமாக வாங்கியிருப்பது காரணமாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments