மணிப்பூரில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை.. நீண்ட வரிசையில் கடைகள் முன் காத்திருக்கும் பொதுமக்கள்..!
மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் மணிப்பூரில் மக்கள் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தால் இருதரப்பினருக்கு இடையே கடந்த 3ஆம் தேதி வெடித்த மோதல் கலவரமாக பரவியது.
ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இம்பாலில் அமைதி திரும்பியுள்ளது. கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் நிரப்புவதற்காக பங்க்குகளில் இருசக்கரவாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பதற்றம் நிறைந்த 23 இடங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் இம்பாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டுகோள் விடுக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் முதலமைச்சர் பைரன் சிங் கேட்டுக்கொண்டார்.
Comments