மணிப்பூர் வன்முறையில் பொதுமக்கள் 54 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல்

0 1816

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை காரணமாக பொதுமக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 3ஆம் தேதி முதல், பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தால் இருதரப்பினருக்கு இடையே நேர்ந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து இராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பை இராணுவத்தினர் உறுதி செய்த நிலையில், இம்பாலில் அமைதி திரும்பியுள்ளதாகவும், பல கடைகள் திறக்கப்பட்டுள்ளதாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிரப்புவதற்காக இருசக்கரவாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பதற்றம் நிறைந்த 23 இடங்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் 2 சிறப்பு விமானங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments