உக்ரைனின் கிராமடோர்ஸ்க் தொழிற்சாலையை ஏவுகணை மூலம் தாக்கிய ரஷ்யா..!

0 1543

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் தொழிற்சாலையை ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்கியதாக டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கனரக உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தொழிற்சாலை மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் தொழிற்சாலையின் நிர்வாக கட்டடம் இடிந்து விழுந்தது.

தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என டொனெட்ஸ்க் ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

இதனிடைய உக்ரைனின் பாவ்லோஹ்ராட் மற்றும் செவாஸ்டோபோலில் உள்ள ரசாயன ஆலைகள் தாக்குதலில் சேதமடைந்திருக்கும் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments