மணிப்பூர் வன்முறை: கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித் ஷா

0 2690

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சரிடமும், உயரதிகாரிகளிடமும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சி காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் கட்டுக்குள் வரப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments