பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு குடோனில் திடீர் தீ விபத்து..!

0 1618

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 39 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பண்டல் செய்யும் இயந்திரம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின.

திருவத்திபுரம் நகராட்சி வளாகத்தில் உள்ள குடோனில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கொளுந்து விட்டு எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனர்.


விசாரணையில் இந்த அலுவலகத்தில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மீது மின்னல் பட்டதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments