சமையல் மாஸ்டர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு.. மத்திய துணை ராணுவப் படை வீரர் கைது

0 2118

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் துணை ராணுவ படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் கனிவண்ணன் என்பவர் கடந்த 2ம்தேதி இரவு சீர்காழி உப்பனாற்று கரையில் தனது மோட்டார் சைக்கிள் அருகில் தலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சீர்காழியைச் சேர்ந்த மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரனை கைது செய்தனர்.

விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.தொடர்ந்து அவரிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இறந்த கனிவண்ணனின் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments