பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

0 4750

தமிழகத்தில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இணையதள வாயிலான விண்ணப்ப பதிவு வரும் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் நடைபெறும் என கூறினார்.

துணை கலந்தாய்வு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், 5 கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க 50 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments