பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு.. பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணை!

0 2028

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து, ஏவுகணை குறித்த முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை கைது செய்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனேவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் என்பவரை பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளம் மூலம் மாணவி என அறிமுகப்படுத்தி தொடர்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வாட்ஸ் ஆப் செயலி மூலம் விஞ்ஞானியை தொடர்பு கொண்டதாகவும், அதனை வைத்தே பின் அவர் மிரட்டப்பட்டதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஏவுகணையின் புகைப்படம், இருப்பிடம் மற்றும் அதன் தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் பகிர்ந்துகொண்டது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலான முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டில், அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1923-ன் கீழ் கைதான விஞ்ஞானிக்கு, வரும் மே 9-ம் தேதி வரை ஏடிஎஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments