தேனி மாவட்டம் ராஜா வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் தவறி விழுந்த சிறுமி மீட்பு!
தேனி மாவட்டம் ராஜா வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மீட்கப்பட்ட நிலையில், சிறுமி விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் ராஜா வாய்க்காலில் தற்போது தூர் வாரும் பணிகள் நடைபெறும் நிலையில் அங்கு கழிவு நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பங்களாமேடு பகுதியில் வசித்துவரும் முத்து - மாரியம்மன் தம்பதியின் நான்கு வயது மகள் வாய்க்காலில் விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சிறுமி மீட்கப்பட்டு, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாய்க்கால் பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்த நிலையில், அதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்தும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Comments