செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

0 1346

செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை அன்று Mladenovac பகுதியில், மர்ம நபர் ஒருவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டே, தானியங்கி ஆயுதத்தின் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.

இதில் பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெல்கிரேட்டில் உள்ள பள்ளி ஒன்றில், 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் அங்கு மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments