திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை: முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நபரை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் 72லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மறைந்திருந்த ஆசிப் ஜாவேத் என்பவனை சுற்றிவளைத்து கைது செய்து 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்கம், மூன்று கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments