மெஸ்ஸிக்கு தடை-ரசிகர்கள் கொந்தளிப்பு
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு பி.எஸ்.ஜி. நிர்வாகம் 2 வாரம் தடை விதித்ததை கண்டித்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நூற்றுக்கணக்கான் ரசிகர்கள் தீப்பந்தங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெஸ்ஸி, பயிற்சியை புறக்கணித்துவிட்டு விளம்பர நிமித்தமாக சவுதி அரேபியா சென்றதால் பி.எஸ்.ஜி. நிர்வாகம் 2 வாரம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி, பி.எஸ்.ஜி கிளப்பிலிருந்து விலகி சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து கிளப்பிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த பி.எஸ்.ஜி ரசிகர்கள், அந்த கிளப்பின் தலைவர் நாஸிர் அல் கலிஃபியையும், மெஸ்ஸியையும் கண்டித்து ஆர்ப்பட்டம் செய்தனர்.
Comments