திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே - ஆளுநர் ஆர்.என்.ரவி
திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
ஆங்கில செய்தி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மாநில அரசு அரசியலமைப்பு கோட்டை கடக்க முனைந்தால், எல்லை மீற முயன்றால் மாநில அரசை கட்டுப்படுத்துவது ஆளுநரின் கடமை என்றும் கூறியுள்ளார்.
அண்மைகால பட்ஜெட்டில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததாகவும், இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியல் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளதாகவும், அவர் நல்ல மனிதர் என்றும் தெரிவித்ததுடன், தனிப்பட்ட முறையில் தங்களுக்குள் நல்ல உறவு இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
Comments