குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்..!

0 1679

காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட்டிருந்த, மாற்று பாதையில் செல்லுங்கள் என்ற எச்சரிக்கை பலகையை பொருட்படுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர். குடி போதையில் இருந்த ஓட்டுரை பிடித்த பொதுமக்கள் திருநள்ளாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காரைக்காலில் இருந்து கும்பகோணம் சென்ற தமிழக அரசு பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments