அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் சாலை விபத்தில் பலி - மணமகன் படுகாயம்!

0 2994

அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கரோலினா மாகாணத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மணமக்கள் வாகனமும், எதிரே அதிவேகத்தில் வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் புதுமண தம்பதியரின் வாகனம் பல அடி தூரத்திற்கு தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டோடியது.

சம்பவ இடத்திலேயே மணமகள் சமந்தா பலியானார். மணமகன் ஆரிக் ஹட்சின்சன் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

ஜேமி கொமொரோஸ்கி என்ற 25வயது இளம்பெண், மது குடித்துவிட்டு அதிவேகத்தில் காரை இயக்கி மணமக்களின் வாகனத்தில் இடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments