இந்தியாவில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணத்தை நாளை பார்க்கலாம் - வானியல் ஆய்வாளர்கள்
இந்தியாவில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணத்தை நாளை பார்க்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுமையாக கருமையாகத் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
5ம் தேதி இரவு 8.44 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம் மறுநாள் அதிகாலை 1.01 மணிக்கு முடிவடையும் என்றும், இது முழுமையாக சுமார் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ளவர்கள் சந்திரனை இரவு 10.52 மணியளவில் அதிகபட்ச இருட்டாகப் பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சந்திர கிரகணத்தைக் காண பார்வையாளர்களுக்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது.
Comments