தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை.. 32,000 பெண்களைக் காணவில்லை என்ற எண்ணிக்கை உறுதியானதல்ல.. சில ஆதாரங்கள் அடிப்படையிலானது - இயக்குனர்!
'32,000 பெண்களைக் காணவில்லை' என்று கேரளத்தின் கதை திரைப் படத்தில் அதன் இயக்குனர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.“
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து இத்திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தை வெளியிடத் தடை கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கேரளாவில் 32,000 பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டதாக திரைப்படத்தில் கூறியது குறித்தும் இயக்குனர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்தார்.
32000 என்ற எண் பொருட்டல்ல, ஒரேயொரு பெண் காணாமல் போயிருந்தாலும் அதன் கதை கூறப்பட வேண்டும் என்று அவர் கூறினார். முன்னாள் முதலமைச்சர் உமன் சாண்டி 2014ம் ஆண்டு 900 பெண்கள் மதம் மாற்றப்பட்டது குறித்து பேசியிருக்கிறார்.
அதன் பிறகு ஆண்டுதோறும் கணக்கிட்டு இந்த எண்ணை பயன்படுத்தி உள்ளோம். கேரளாவில் 50 ஆயிரத்துக்கும் மேல் எண்ணிக்கை இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
எனவே படத்தில் பயன்படுத்தப்பட்ட 32,000 எண்ணிக்கை உறுதியானதல்ல என்ற போதும் சில உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது என்று இயக்குனர் சுதிப்தோ சென் கூறினார்.
Comments