"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி20 சுற்றுலாத்துறை மாநாடு!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி 20 சுற்றுலாத் துறை மாநாடு நடக்கப் உள்ளது.
இந்த மாநாட்டில் வெளிநாட்டு குழுக்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
ஜி 20 மாநாட்டுக்கு வரும் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் குல்மார்க் பனிச்சறுக்கு மையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதனை முன்னிட்டு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜி 20 கூட்டத்தைத் தடுத்து நிறுத்த தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்னர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்.எஸ் ஜி கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments