அன்பு காணிக்கையாக மூனே மூனு ஆரஞ்சு பழம்... தூக்கி வீசிய பாதிரியார்..! ரொம்ப கோவக்காரரா இருப்பாரோ ?

0 6961

நெல்லை மாவட்டம் தேவாலயம் ஒன்றில் பங்குதந்தைக்கு காணிக்கையாக 3 ஆரஞ்சுபழம் மட்டுமே கொடுக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவர், ஆரஞ்சுபழங்களை துக்கி வீசி, குழுவில் உள்ள மக்களை எச்சரித்த வீடியோ வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் அழகப்பபுரத்தை அடுத்த ராஜகிருஷ்ணாபுரம் தேவாலயத்தில் பங்கு தந்தையாக இருப்பவர் கிறிஸ்டியான்.

சம்பவத்தன்று திருப்பலியின் போது சூசையப்பர் அன்பியம் குழுவை சேர்ந்த 30 குடும்பத்தினர் பாதிரியார் கிறிஸ்டியானுக்கு காணிக்கையாக 3 ஆரஞ்சு பழங்களை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமான பாதிரியார், நான் என்ன பிச்சைக்கார பயலா? என்று கேள்வி எழுப்பியதோடு 3 ஆரஞ்சு பழங்களையும் திசைக்கு ஒன்றாக சுற்றி வீசியதால பரபரப்பு ஏற்பட்டது

நீங்கள் கோடீஸ்வரர் என்றால் தானும் கோடீஸ்வரர் என்று கூறிய பாதிரியார், தான் இங்கு பங்கு தந்தையாக இருக்கும் வரை இதனை மறக்க மாட்டேன் என்றதோடு, நீங்களும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments