மின் சிக்கன நடவடிக்கையாக பஞ்சாப்பில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நேரம் மாற்றியமைப்பு
மின் சிக்கன நடவடிக்கையாக, பஞ்சாப்பில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.
காலையில் முன்கூட்டியே அரசு அலுவலகங்களை திறந்து மின் நுகர்வு உச்சத்தை எட்டும் நண்பகல் வேளையில் பணியை முடி ப்பதற்காக புதிய திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் அமல்படுத்தியுள்ளார்.
அதன்படி, வழக்கமாக காலை 9 முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டுவந்த அலுவலகங்கள், நேற்றுமுதல் காலை 7.30 முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட்டன.
பஞ்சாப் தலைமைச் செயலகத்திற்கு காலை 7.30 மணிக்கு வந்த முதலமைச்சர் பகவந்த் மான், வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இந்த நேர மாற்றத்தின் மூலம் 350 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments